News April 8, 2025
அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு www.icds.tn.gov.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Similar News
News October 19, 2025
தென்காசியில் தொடர் மழை; குண்டாறு அணை நிரம்பியது

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தென்காசியில் 99 மி.மீ., ஆய்க்குடியில் 96 மி.மீ., செங்கோட்டையில் 96 மி.மீ., குண்டாறு அணைப்பகுதியில் 88 மி.மீ., சிவகிரியில் 75 மி.மீ., ராமநதியில் 86 மி.மீ., மழை பதிவானது. 36 அடி உயரமுள்ள செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
News October 19, 2025
தென்காசி: கட்டட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி

செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கோட்டையில் உள்ள வீட்டில் கட்டுமான பொருட்கள் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் இடிபாடுகளில் சிக்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த செங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News October 19, 2025
குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது . மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.