News April 7, 2025
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 10ஆம் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்…
Similar News
News April 8, 2025
மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.
News April 8, 2025
மதுபான பாட்டில்களை கடத்திய 5 பேர் கைது

தேன்கனிக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு காரில் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக கடத்தி சென்றதை பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஸ் (33), தீனா (24) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த திருசபரி (25), தேன்கனிக்கோட்டை சாப்ரானப்பள்ளியை சந்தோஸ் (20), கர்நாடகா நாகராஜ் (24) ஆகிய 5 பேரை கைது செய்து மதுபானங்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.
News April 7, 2025
யாரும் அறியாத கிருஷ்ணகிரி கல்திட்டைகள்

முதுமக்கள் தாழி பற்றி தெரிந்தவர்கள் டால்மென் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.கிருஷ்ணகிரியில் மல்லச்சத்திரம் பகுயில் முதுமக்களை அடக்கம் செய்த டால்மென்ஸ் எனப்படும் கற்திட்டைகள் காணப்படுகின்றன.சுற்றிலும் பாறைகளை கொண்டு சிறிய அறை போல் அமைத்து அதில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இது போன்று இப்பகுதியில் நிறைய கல் திட்டைகள் உள்ளது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க