News October 25, 2024
அக்.29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் அக்.29 காலை 11 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
Similar News
News July 8, 2025
உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள்<
News July 8, 2025
காலம் கடந்து நிற்கும் திருவலம் இரும்பு பாலம்

ராணிப்பேட்டை அருகே திருவலத்தின் முக்கிய அடையாளமாக ராஜேந்திரா பாலம் உள்ளது. ஆங்கிலேயர்கள் அப்போதே பெண்ணையாற்றின் நீரோட்டத்தை கணித்து , துருப்பிடிக்காத வகையில் பாலத்தை கட்டியுள்ளனர். வித்தியாசமாகவும் ராஜேந்திரா பாலம் திகழ்ந்ததால், இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் தொடங்கி தனுஷ் வரை பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எடுக்கப்பட்ட இந்த பாலம் வரலாற்று சின்னமாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 07)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100