News October 25, 2024
அக்.29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் அக்.29 காலை 11 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
ராணிப்பேட்டை இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பரிந்துரையின் பேரில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் (POCSO) வழக்கில் தொடர்புடைய எதிரி தேவக்குமார் (வ/26) என அறியப்படும் நபரை. இன்று (நவ.17) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல்த்துறையினர் கைது செய்தனர். பின், அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 18, 2025
ராணிப்பேட்டை: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கே <


