News March 19, 2025
அக்னி வீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம் என திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. SHARE IT
Similar News
News March 19, 2025
இன்றைய ரோந்து காவலர்களின் பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டம் இன்று (19.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு எந்த குற்றமாக இருந்தாலும் தெரிவிக்கலாம். காவல்துறை தெரிவித்துள்ளது.
News March 19, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியது . அந்த வகையில் இன்று(மார்ச்.19) இரவு 10 மணி வரை இராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்
News March 19, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 19) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.