News June 28, 2024
அக்னிவீர் வாயு ஏர்மேன் ஆட்சேர்ப்பு

2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
பெரம்பலூர்: புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று (நவ.05) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் பெரம்பலூரின் புதிய முதன்மைக் கல்வி அலுவராக சுவாமி முத்தழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வில் திருவண்ணாமலை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 6, 2025
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (நவ.05) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 13 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
News November 6, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


