News May 30, 2024

அக்னிவீர் தேர்விற்கு இளைஞர்களுக்கு அழைப்பு

image

அக்னிவீர் இசைகலைஞர்கள் தேர்விற்கு இந்திய இராணுவத்தால்
03.07.2024 முதல் 12.07.2024 வரை பெங்களூரில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 2ஆம் தேதி 2004க்கு பின் 2007 ஜுலை 2க்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் இசைக்கருவி வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய இளைஞர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்

Similar News

News April 21, 2025

லாரி மோதியதில் இளைஞர் பரிதாப பலி

image

திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் சுதாகர் (25). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்தார். மனக்கரம்பை முதன்மைச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் ஆல்வின் பலத்த காயமடைந்தார். உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

News April 20, 2025

தஞ்சை; 12th பாஸ் போதும், ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Digital Marketing Manager பணியில் உள்ள 20 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யுங்கள்

News April 20, 2025

கடன் பிரச்சனை தீர்க்கும் வைரவர்

image

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ளது அருள்மிகு வைரவன் திருக்கோயில். வேண்டியது நினைத்து சாமிக்கு வஸ்திரம், சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் கர்மவினைகள் தீர்ந்து விடும், கடன் பிரச்சனை, திருமண தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் வைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!