News April 10, 2025

அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

கோவை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

Similar News

News November 21, 2025

கோவை மாணவி கூட்டு பாலியல் வழக்கு: 3 பேரின் காவல் நீட்டிப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைதான 3 பேருக்கும் விதிக்கப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், அவர்கள் மூவருக்கும் வரும் டிசம்பர் 3-ந்தேதி வரை நீட்டித்து கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 21, 2025

மேட்டுப்பாளையம் அருகே பயங்கர விபத்து!

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளியான இவர் இன்று தனது டூவீலரில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அசுர வேகத்தில் சென்ற பிக்கப் வாகனம் மோத்தேபாளையம் அருகே சென்ற போது சிவக்குமாரின் டூவீலர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 21, 2025

கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை: நயினார்

image

கோவை (ம) மதுரை ஆகிய 2 மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது; கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தவிர நிராகரிக்கப்படவில்லை என ஆதாரத்தைக் காட்டி திமுகவிற்க கேள்வி எழுப்பினர்.

error: Content is protected !!