News September 13, 2024
அகில இந்திய தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழில் பயிற்சி குடும்பத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Similar News
News November 21, 2025
விருதுநகர்: தகாத உறவு.. போலீஸ் ஏட்டு ‘சஸ்பெண்ட்’

விருதுநகர் மாவட்டம், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஜெயபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்., 30 இரவு, 11:30 மணிக்கு மேல், விருதுநகர் அருகே இளம் பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்தனர். அப்போது, பெண்ணின் கணவர், உறவினர்கள் ஜெயபாண்டியை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
News November 21, 2025
சாத்தூர் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பைபாஸ் மேம்பாலத்தில் திருநெல்வேலி நோக்கி சென்று லாரி மீது திருமங்கலத்தில் இருந்து வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.