News December 4, 2024
அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமான சுவர்

வெம்பக்கோட்டையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 2500 க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தோண்டப்பட்டு வரும் அகழாய்வு குழியில் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டுள்ளது. இவை குடியிருப்பு அல்லது தொழில் கூட கட்டுமானமாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
சிவகாசி: இளம் பெண்ணிடம் அத்துமீறிய அக்கா கணவர்

சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரின் அக்காவின் கணவரான மாரீஸ்வரன் (37) என்பவர் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இளம்பெண் கூச்சலிட்டதால் மாரீஸ்வரன் இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இளம்பெண் புகாரில் மாரீஸ்வரன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
News December 12, 2025
விருதுநகர்: அரசு வேலை வேண்டுமா…இலவச பயிற்சி

விருதுநகர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a முதன்மை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உடையோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் தெரிவிக்கலாம்.
News December 12, 2025
விருதுநகர்: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.


