News December 5, 2024
ஃபெங்கல் புயல்: தூத்துக்குடி மாநகராட்சி நிவாரண உதவி

தமிழகத்தில் ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் பணமாகவும், பொருளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாரி மூலம் நிவாரண பொருட்கள் நேற்று(டிசம்பர் 4) அனுப்பி வைக்கப்பட்டது. மேயர் ஜெகன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Similar News
News December 12, 2025
தூத்துக்குடி: பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை

தூத்துக்குடி தென்பாகம் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து 5 பார்சல்களில் 112 கிலோ புகையிலை பொருள்கள் வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இந்த பார்சல்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 12, 2025
அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.