News February 27, 2025
பயிர் காப்பீட்டில் ரூ.5,148 கோடி நிவாரணம்: பன்னீர்செல்வம்

சேலத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,148 கோடி நிவாரண உதவித்தொகையாக எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Similar News
News February 27, 2025
சேலம் கோட்டத் அஞ்சலங்களில் விபத்துக் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையில் ரூபாய் 599 காப்பீடு செலுத்தி ரூபாய் 10 லட்சமும், ரூபாய் 799 காப்பீடு தொகைக்கு ரூ.15 லட்சமும் விபத்துக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நாளை (பிப்.28) வரை சேலம் கிழக்கு, மேற்கு கோட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலங்களிலும் நடக்கிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News February 27, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சேலத்தில் பிப்., மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள்கூட்டம் நாளையதினம் வெள்ளிக் கிழமை காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஆபீஸில் நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும் தபால் மூலமாவும் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
News February 27, 2025
250 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்!

வார இறுதி நாட்கள், வளர்பிறை முகூர்த்தத்தினங்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (பிப்.28) முதல் மார்ச் 03- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஓசூரு, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.