News September 28, 2025
இளம் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ராஜஸ்தான், கோட்டாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர் ஷர்மா(10) மற்றும் அவரது அண்ணன் சவுர்யா(15) இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வீர் ஹனுமான்’ சீரியலில் நடித்த வீர் ஷர்மா, நாடு முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார். குறிப்பாக சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ‘நெக்ஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார். வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. #RIP
Similar News
News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.
News November 15, 2025
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழைப்பழத்தில் தான் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழையை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.
News November 15, 2025
சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $105 குறைந்து $4,080-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (நவ.14) தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்து, ₹93,920-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


