News May 7, 2025

அடேங்கப்பா.. இத்தனை கோடீஸ்வரி MP, MLA-க்களா?

image

நாடு முழுவதும் உள்ள பெண் MP, MLA-க்களில் 17 பேர் கோடீஸ்வரிகள் என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. ADR அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த 17 பேரின் சொத்து மதிப்பு மட்டும் ₹10,417 கோடி என்பது தெரியவந்துள்ளது. மக்களவையில் 6 பேரும், மாநிலங்களவையில் 3 பேரும், மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் 8 பேரும் கோடீஸ்வரிகளாக உள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் உண்டாம். உங்க MP, MLA எப்படி?

Similar News

News November 8, 2025

ECI அதிகாரிகளுக்கு பிரியங்கா காந்தி பகிரங்க எச்சரிக்கை

image

பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ஞானேஷ் குமார் உள்ளிட்ட ECI தலைமை அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் வாக்குகளை திருடி துரோகம் இழைத்த ECI அதிகாரிகளை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

News November 8, 2025

சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கெளரவம்

image

கோவாவில் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள். இந்நிலையில், விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கெளரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், ரஜினிக்கு இந்த கெளரவம் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!