News June 18, 2024
உலகின் வலிமையான ஹோட்டல் ‘தாஜ்’

உலகின் வலிமையான ஹோட்டல் பிராண்டாக, மும்பை தாஜ் மஹால் பேலஸ் உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பிராண்ட் ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள ‘ஹோட்டல் 50, 2024’ அறிக்கைபடி, தாஜ் ஹோட்டல் தனது பிராண்ட் மதிப்பிலிருந்து 45% அதிகரித்து $545 மில்லியன் டாலர்களாக (₹45,53,17,52,500) உள்ளது. இந்த சாதனை தங்கள் விருந்தினர்களின் நம்பிக்கை மற்றும் பாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தாஜ் நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
Similar News
News January 21, 2026
தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியுள்ளார். மேலும் TN போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெழும்பாக உள்ள ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News January 21, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 21, 2026
இஷான் IN, ஸ்ரேயஸ் OUT: சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20-ல் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடமாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். காயத்தால் திலக் வர்மா விலகிய நிலையில், No.3 ஸ்பாட்டில் களமிறங்க போவது யார் என கேட்கப்பட்டது. இதற்கு, WC அணியில் இடம்பெற்றுள்ளதால் NO.3 ஸ்பாட்டில் இஷான் கிஷானுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் அதற்கு தகுதியானவர் எனவும் சூர்யகுமார் குறிப்பிட்டார். இதைப்பற்றி உங்க கருத்து?


