News November 19, 2025
World Roundup: USA-Saudi அணுசக்தி ஒப்பந்தம்!

*சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்ப் சந்திப்பின் போது, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. *தெற்கு ஜப்பானில் உள்ள கடற்கரை நகரில் 170-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது *<<18327094>>எப்ஸ்டீன்<<>> தொடர்பாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை டிரம்ப் திட்டியதால் சர்ச்சையானது *ஆஸ்திரேலியாவில் 8 மாத இந்திய கர்ப்பிணி பெண் மீது கார் மோதியதில் பலியானார்.
Similar News
News January 20, 2026
பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் சரிந்து 82,180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து 25,232.50 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
News January 20, 2026
கவர்னரை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது: TTV

மக்களுக்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டிய கவர்னர் உரை, திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பதாக TTV தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், உண்மைக்கு புறம்பான தகவல்களை அறிக்கையாக தயாரித்து அதனை கவர்னர் வாசிக்க திமுக நிர்பந்தித்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் தேசிய கீதத்தை முதலில் பாடக்கோரி நீண்ட நெடிய பாரம்பரியமிக்க பேரவை மரபை மாற்றக் கோருவது அழகல்ல என கவர்னரையும் சாடியுள்ளார்.
News January 20, 2026
சற்றுமுன்: தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ₹3,600 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் ₹1,280 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹2,320 உயர்ந்திருப்பது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


