News November 19, 2025
World Roundup: USA-Saudi அணுசக்தி ஒப்பந்தம்!

*சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்ப் சந்திப்பின் போது, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. *தெற்கு ஜப்பானில் உள்ள கடற்கரை நகரில் 170-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது *<<18327094>>எப்ஸ்டீன்<<>> தொடர்பாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை டிரம்ப் திட்டியதால் சர்ச்சையானது *ஆஸ்திரேலியாவில் 8 மாத இந்திய கர்ப்பிணி பெண் மீது கார் மோதியதில் பலியானார்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
கோலியை பாலோ பண்ணுங்க: கவாஸ்கர்

இளம்வீரர்கள் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்றி விளையாட வேண்டும் என Ex கிரிக்கெட்டர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி ODI தொடரை இழந்தது. 3-வது போட்டியில் ஒற்றை ஆளாக ரன்கள் குவித்த கோலி குறித்து பேசிய கவாஸ்கர், இன்னிங்ஸை நிதானமாக கட்டமைத்து பின்னர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தும் அவரின் ஆட்டத்தை இளம் வீரர்கள் பாடமாக எடுத்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
News January 21, 2026
NASA-ல் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(60) NASA-ல் இருந்து ஓய்வு பெற்றார். 3 முறை விண்வெளிக்கு பயணித்துள்ள அவர், மொத்தம் 608 நாள்கள் அங்கு கழித்தார். மேலும், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணங்களையும் (9 முறை) அவர் மேற்கொண்டுள்ளார். 1998-ல் NASA-ல் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். டிசம்பர் 27-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளதாக NASA அறிவித்துள்ளது.


