News August 6, 2024

மகளிர் T20WC தொடர் இடம் மாற்றமா?

image

வங்கதேசத்தில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்ததால், நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனால், டி20 தொடரை இந்தியா அல்லது வேறு நாட்டில் நடத்தலாமா என்று ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Similar News

News January 13, 2026

கன்னியாகுமரி எஸ்பி கடும் எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் லாட்ஜுகள் மற்றும் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் ஸ்பா நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

ராமதாஸ் மனமாற்றத்திற்கு இதுதான் காரணமா?

image

பாமகவுக்கு தானே தலைவர் எனக் கூறி வரும் ராமதாஸ், <<18833948>>NDA கூட்டணியிலிருந்து தாங்கள்<<>> இன்னும் விலகவில்லை என நேற்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரித்தபோது, அன்புமணிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ராமதாஸை சமாதானம் செய்ய Ex அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருவதே காரணம் எனக் கூறுகின்றனர். தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த அவர், பாமக ஒன்றிணைப்பு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு உள்ளிட்டவைகள் குறித்து பேசினாராம்.

News January 13, 2026

இந்தியா மீது மேலும் 25% வரி.. USA-ன் முடிவு

image

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாக கூறிய அவர், இதுவே இறுதியான முடிவு எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனா, இந்தியா, UAE, துருக்கி ஆகிய நாடுகள் USA உடன் வர்த்தகம் செய்யும்போது அதிக வரிச் சுமையை சுமக்க நேரிடும். எனவே, இந்தியாவில் பொருள்களின் விலைவாசியும் உயரலாம்.

error: Content is protected !!