News February 25, 2025
மகளிர் பிரிமீயர் லீக்: சூப்பர் ஓவரில் உ.பி. வாரியர்ஸ் வெற்றி

மகளிர் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், உ.பி. வாரியர்ஸ் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு 180/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லிஸ் பெர்ரி 90 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய உ.பி. வாரியர்ஸ் 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் உ.பி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
Similar News
News March 12, 2026
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அர சால் ஆணையிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை சிறுபான்மையினர் அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
இது இருந்திருந்தால் மாணவிக்கு வன்கொடுமை நடந்திருக்காதா?

வீட்டில் கழிப்பறை இல்லாததால் வெளியே சிறுநீர் கழிக்க சென்ற <<19356260>>மாணவி வன்கொடுமைக்கு<<>> ஆளாகியுள்ளார். தூய்மை இந்தியா இயக்கம் மூலம், கிராம & நகர்ப்புற வீடுகளில் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் 2014-லேயே வந்துவிட்டது. இந்நிலையில், 12 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கிராமங்களில் சில வீடுகளில் கழிப்பறை இல்லையா எனவும், அது இருந்திருந்தால் மாணவிக்கு இக்கொடுமை நடந்திருக்காது என்றும் பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 12, 2026
பாலியல் குற்றவாளிகளை திமுக காக்கிறதா? EPS

தூத்துக்குடியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறிய அவர், குற்றவாளிகளை உடனே கண்டறிந்தால் உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர் என்றார். மேலும், உறவினர்களுடன் திமுக MLA ஏன் சமாதானம் பேசவேண்டும் எனவும் குற்றவாளிகளை காக்க திமுக முயல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


