News November 19, 2024
பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராக போராடிய பெண் தற்கொலை

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிவந்த ஏகனாபுரம் கிராம துணைத் தலைவி திவ்யா (35) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர், ஏகனாபுரத்தில் 9 முறை விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். திவ்யாவின் மரணத்திற்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
ஆயுதங்களை ஒப்படைத்து 11 நக்சல்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் நக்சல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிராவில் நேற்று 11 நக்சல்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களை பற்றி தெரிவித்தால் ₹82 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், லெகமி என்பவர் மீது 43 என்கவுண்டர் உள்பட 88 குற்ற வழக்குகள் உள்ளது.
News December 11, 2025
எனது காதல் இதன் மீது மட்டுமே: ஸ்மிருதி மந்தனா

திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து ஸ்மிருதி மந்தனா முதல்முறையாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை எனவும், இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்ததும் உள்ளுக்குள் பிறக்கும் உத்வேகம் தான் தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளில் இருந்து வெளியேற இந்த உத்வேகம் தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறியுள்ளார்.
News December 11, 2025
அமித்ஷா பதிலில் பதட்டம் தெரிந்தது: ராகுல்

மக்களவையில் வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பதிலில் பதட்டம் தெரிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருப்பது பற்றியோ, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து CJI நீக்கியது குறித்தோ அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. CCTV வழங்கப்படாததற்கு அவர் கூறிய காரணம் அபத்தமாக இருந்ததாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.


