News August 20, 2024

இந்த வீடியோக்களை நீங்கள் பார்ப்பீர்களா?

image

சோஷியல் மீடியாவில் நேரம் செலவிடுபவர்கள் சலிப்பான VIDEOவை பார்த்தால், அதனை உடனே ஸ்கிப் செய்துவிடுவர். ஆனால், இந்த பழக்கம் சலிப்புத்தன்மையை மேலும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வில், குழந்தைகள் நடனம், விலங்குகளின் சேட்டை போன்ற VIDEOவை பார்ப்பவர்கள், அதனை சலிப்பாக கருதி தவிர்க்கின்றனர். இது அவர்களுக்கு குறைவான ஈடுபாடு, பார்வை அனுபவம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

Similar News

News January 22, 2026

கரூர் வழக்கில் அடுத்த அதிரடிக்கு தயாராகும் CBI

image

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக SC-ல் அடுத்த ஓரிரு தினங்களில் சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. SC உத்தரவுப்படி வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், கரூர் கலெக்டர் முதல் தவெக தலைவர் விஜய் வரை என பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வரும் பிப். 3-ம் தேதி SC-ல் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வழக்கின் ஆதாரங்களை சிபிஐ அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.

News January 22, 2026

அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை அறிவித்தார்

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் CBI விசாரணை ஆகியவற்றை கொண்டு விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுபோன்ற கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல தங்களுக்கு நேரமில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மக்கள் தங்களுடன் உள்ளதாகவும், 2026-ல் நிச்சயம் விஜய் முதல்வர் ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

image

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் *இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் *அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது எளிய வழி என்றாலும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்து வைக்க வேண்டியது அவசியம். இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!