News June 19, 2024

வெற்றியைத் தொடருமா இந்திய அணி?

image

தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று விளையாடுகிறது. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் அடித்து அசத்தியதால், இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவின் வெற்றி இன்றும் தொடருமா?

Similar News

News January 17, 2026

ELECTION: அதிமுக கோட்டையை தட்டி தூக்கும் திமுக!

image

கடந்த 2021 தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் திமுக ஒன்றில் கூட வெல்லவில்லை. இந்நிலையில், வரும் தேர்தலில் 7 தொகுதிகளில் வெல்லும் என அக்னி செய்தி நிறுவனம் கணித்துள்ளது. தொண்டாமுத்தூர், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் அதிமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களை அக்னி நிறுவனம் துல்லியமாக கணித்தது குறிப்பிடத்தக்கது.

News January 17, 2026

28 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக

image

<<18877155>>மஹாராஷ்டிராவில்<<>> நடந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரேக்களின் கோட்டையாக கருதப்பட்ட மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த 1996 முதல் தாக்கரே சிவசேனாவின் மேயரே மும்பையை ஆண்டு வந்த நிலையில், இனி பாஜக மேயர் செங்கோல் ஏந்த உள்ளார். இதன்மூலம் 28 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக கூட்டணி 118, சிவசேனா (தாக்கரே) 65 இடங்களில் வென்றுள்ளது.

News January 17, 2026

பற்றி எரியும் ஈரான்.. களத்தில் இறங்கிய புடின்!

image

<<18874125>>ஈரான்<<>> விவகாரத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் நிலவும் நிலையில், அதை தணிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் மற்றும் இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன் அவர் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!