News August 19, 2024

மாற்றுக் கொள்கையை அரசு வகுக்குமா?

image

பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 1960களில் இருந்து காலாவதியான கட்டமைப்பு & நிலையற்ற உணவு விலை நிர்ணய பணவீக்க இலக்குகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதாக அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைதான். வேளாண்துறை வளர்ச்சி & முதலீட்டை அதிகரிக்க பணவியல் கொள்கையில் ஏற்ற மாற்றுக் கொள்கையை அரசு வகுக்குமா?

Similar News

News January 24, 2026

வேலூர்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

image

வேலூர் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

image

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.

News January 24, 2026

FLASH: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த வாரமே வாங்கி இருந்தால் உங்களுக்கு ₹11,760 மிச்சமாகி இருக்கும். ஆம், ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 1 சவரன் தங்கத்தின் விலை ₹1,06,240 ஆக இருந்தது. மறுபுறம், வெள்ளி விலையும் ஒரே வாரத்தில் ₹55,000 அதிகரித்து, 1 கிலோ ₹3.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!