News January 12, 2025

மகளுக்காக மனம் மாறுவாரா சரத் பவார்?

image

சரத் பவார் – அஜித் பவார் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல் மகாராஷ்டிராவில் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. BJP-க்கு மக்களவையில் கூடுதலான MP-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக ‘சரத்’ அணியில் இருக்கும் 8 MP-க்களை NDA கூட்டணிக்குள் கொண்டுவர BJP மேலிடம் விரும்புகிறது. இதற்கு சரத் பவார் உடனே சம்மதிக்காவிட்டாலும், தனது மகள் சுப்ரியா சுலேவுக்காக அவர் விரைவில் ஒப்புக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

Similar News

News November 10, 2025

இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட், சேது சூப்பர்ஃபாஸ்ட், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து மட்டுமே புறப்படும், எழும்பூர் செல்லாது. அதேபோல், அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம், எழும்பூர் வழியாக இயங்காது.

News November 10, 2025

விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

image

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

error: Content is protected !!