News September 30, 2025
WCயை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

மகளிர் ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் 4 நகரங்களிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய முதல் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த இந்தியா நிச்சயம் இலங்கைக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 14, 2025
விபத்துகளுக்கு மதுக்கடைகளே காரணம்: அண்ணாமலை

இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக, தமிழகம் மாறியிருப்பது மத்திய அரசின் தகவலின்படி தெரிய வந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சிய போக்கே, இதற்கு காரணம் எனவும் அவர் சாடியுள்ளார். போதைப் பொருள் விற்பனை, சாலை விபத்துகளை தடுக்க இயலாத திமுக அரசு தூக்கி எறியப்படும் என்றும் கூறியுள்ளார்.
News December 14, 2025
BREAKING: வெளுத்து கட்டப்போகும் மழை… ALERT

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 19-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது.
News December 14, 2025
வாக்கு திருட்டு முழக்கத்துடன் டெல்லியில் காங்., பேரணி

பாஜக மற்றும் ECI மீது ராகுல் வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பிஹார் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ், டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளது. மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் பேரணியில், சோனியா, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


