News July 16, 2024

அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டது ஏன்?

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, பல அதிகாரிகளை தமிழக அரசு கூண்டோடு மாற்றம் செய்தது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாகவே பல அதிகாரிகளை அரசு அதிரடியாக மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News

News July 8, 2025

ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

image

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.

News July 8, 2025

மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

image

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள்!

News July 8, 2025

ரூபாய் நோட்டு அச்சிட இதெல்லாம் பாக்கணும்

image

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை பின்வரும் காரணிகள் அடிப்படையில் தான் கணக்கிட்டு அச்சடிக்கிறது: *பழைய நோட்டுகளை அகற்றுதல் *மாற்றீடு செய்யும் தேவை *இருப்பு தேவை *பொருளாதார வளர்ச்சி விகிதம் *உற்பத்தி விகிதம் *கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை தடுத்தல் *தங்கம் இருப்பு உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து, எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.

error: Content is protected !!