News January 13, 2025
ஏன் பும்ராவை கேப்டனாக்க BCCI தயங்குகிறது?

பும்ராவை முழு நேர கேப்டனாக அறிவிக்க BCCIக்கு இருக்கும் தயக்கத்தின் காரணம், அவரின் உடல் தகுதி. அவ்வப்போது காயத்தால் அவதிப்பட்டு சில போட்டிகளை பும்ரா தொடர்ந்து மிஸ் செய்கிறார். அது அணியின் நிலைத்தன்மையை குலைக்கும் என நம்புகிறார்கள் என்னவோ. WTC 2025 – 2027 வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்னர் அணிக்கு கேப்டன் வேண்டும். பும்ரா இல்லனா வேறு யார் டெஸ்ட் கேப்டனாக வர கரெக்ட்டான சாய்ஸ் சொல்லுங்க?
Similar News
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.
News November 12, 2025
டெல்லியில் காற்று மாசு அவசர நிலை

டெல்லியில் காற்று தரக்குறியீடு 428 ஆக உயர்ந்து, இந்த ஆண்டின் மிக மோசமான மாசு நிலையை எட்டியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு அதிக மாசு ஆகும். இதனால், டெல்லி முழுவதும் GRAP-3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. *கட்டுமான, இடிப்பு பணிகளுக்கு தடை *BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் 4 சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு *5-ம் வகுப்பு வரை பள்ளிகளில் Hybrid முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவு.
News November 12, 2025
தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், பொது வீரராக பங்கேற்ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்னர் 41-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.


