News April 5, 2024
தோனிய தவற வேற யாரு செய்வா?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி, ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் அவர் இதுவரை விளையாடியதில், 20 ஆவது ஓவர்களில் மட்டும் 303 பந்துகளில் 61 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் கடைசி ஓவரில் குறைந்த பந்துகளில் அதிக சிக்ஸர் விளாசிய பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். முன்னதாக DC அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தோனி 2 சிக்ஸர் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
ஜன நாயகன் லீக்.. பொங்கிய சிவகார்த்திகேயன்

‘ஜன நாயகன்’ படம் முழுவதுமே இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை கசியச் செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் திரைத்துறையினரின் கடின உழைப்புக்கும், திரைத்துறைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
News April 10, 2026
பிஹாரின் அடுத்த முதல்வர் யார்?

தேசிய அரசியலுக்குள் <<19614648>>நிதிஷ் <<>>நுழைந்துவிட்டதால், பிஹாரின் அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரேஸில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் ஆதரவு உள்ளதால் சாம்ராட் சௌத்ரிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.
News April 10, 2026
மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.


