News August 22, 2024
எந்தக் கொள்கையை முன்வைப்பார் விஜய்?

தவெக தலைமை அலுவலகத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் விஜய் சற்று நேரத்தில் அறிமுகம் செய்கிறார். பின்னர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். இதில் தனது அரசியல் கொள்கையை விஜய் முன்வைப்பார் எனத் தெரிகிறது. திமுக அதிமுகவின் திராவிடக் கொள்கை, சீமானின் தமிழ்தேசியம், பாஜகவின் தேசியக் கொள்கைகளுக்கு மாற்றாக ஒரு கொள்கையை விஜய் முன்வைப்பார் எனத் தெரிகிறது.
Similar News
News November 7, 2025
FLASH: தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்

சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $19 உயர்ந்து $4,003-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக $4,000 டாலர்களுக்கு கீழ் விற்பனையாகி வந்த தங்கம் மீண்டும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நம்மூரில் நேற்று ₹1,120 உயர்ந்த நிலையில், இன்றும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 7, 2025
அழகே பொறாமைப்படும் பேரழகுக்கு ஹேப்பி பர்த்டே!

நிஜத்தில் ராணிகள் இப்படிதான் இருந்திருப்பார்களோ என என்னும் வகையில் ரசிகர்களை வியக்க வைத்த ‘ஸ்வீட்டி’ அனுஷ்காவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே. அருந்ததி ஜக்கம்மாவாக, வானம் சரோஜாவாக, பாகுபலி தேவசேனாவாக நடிப்பில் மட்டும் மிரட்டாமல், தனது அழகாலும் திரையில் ஓவியமாக நின்றார். அனுஷ்கா நடித்ததில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க?
News November 7, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளரான திருப்பூர் Ex MP சத்யபாமா உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியுள்ளார். Ex MP சத்யபாமா, கடந்த 30-ம் தேதி செங்கோட்டையனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யபாமாவை ஏற்கெனவே மாவட்ட மகளிர் அணி பொறுப்பிலிருந்து EPS நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


