News November 19, 2024
எப்போ போவீங்க: மோடியை சாடிய ப.சிதம்பரம்

மணிப்பூரில் மீண்டும் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ப.சிதம்பரம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். “மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை கைவிட்டு, மணிப்பூருக்கு உடனடியாக செல்ல வேண்டும். 5,000 துணை ராணுவத்தினரை அனுப்புவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. மணிப்பூர் மக்களிடம் மோடி உரையாட வேண்டும்” என ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
Similar News
News December 6, 2025
விஜய்யுடன் கூட்டணி பேச்சு.. முதல் கட்சியாக அறிவிப்பு

லாட்டரி மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் டிச.14-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளார். இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேர தாங்கள் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு தவெக விரும்பினால் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளை சார்லஸ் இழுக்க முயற்சித்தபோது, அவர்களில் சிலர் தவெகவில் இணைந்ததாக கூறப்பட்டது.
News December 6, 2025
10th போதும்.. ₹21,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: 21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <
News December 6, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

அமமுகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். முன்னதாக அமமுகவினர் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து பேசிய டிடிவி தினகரன், விசுவாசம் இல்லாதவர்கள் கட்சி மாறி வருவதாக சாடியிருந்தார்.


