News March 28, 2024

‘ரஜினி 171’ படத்தின் டைட்டில் எப்போது?

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 171ஆவது படத்தின் டைட்டிலை, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன் தயாரிப்பு பணிகளுக்கு மட்டுமே 5 மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் தெரிவித்திருந்தார். ரஜினியை வைத்து இதுவரை எடுக்கப்படாத ஸ்டைலில் இப்படம் உருவாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Similar News

News January 20, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து!

image

சூளகிரி அடுத்த சாம்பல்பள்ளம் கிராமத்தில் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை (ஜன.19) கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக லாரி டிரைவர் சிறு காயங்களுடன் தப்பினார். மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News January 20, 2026

புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை!

image

குடல் சிகிச்சைக்காக வழங்கப்படும் 3 மாத்திரைகள் தரமற்றவை என கருதி புதுச்சேரி அரசு தடை செய்துள்ளது. இமாச்சலில் தயாரிக்கப்பட்ட மாக்பான்சோ 40 மாத்திரை, கேரளாவின் பெபாவிட் பாராசிட்டமல் 650mg, ராஜஸ்தானின் சங்காவதி 5g ஆகிய மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை இனி விற்பனை செய்யக்கூடாது என்றும், இருப்பில் உள்ள மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

News January 20, 2026

கவர்னர் உரையே இனி இருக்காதா?

image

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!