News August 17, 2025

5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?

image

2019-ல் இந்தியாவில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ₹35,000-ஆக இருந்தது. தற்போது அதன் விலை ₹1 லட்சத்தை கடந்துவிட்டது. 2019-2025 காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை 200% உயர்வை கண்டிருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் 2030-ல் தற்போதிருக்கும் விலையை விட தங்கத்தின் விலை 2 மடங்காக உயருமாம். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தில் விலை ₹2 லட்சத்தை கடக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Similar News

News December 15, 2025

சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவில் ஐக்கியமாக நிர்வாகிகள் பலர், அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக அரியம்பாளையம் பேரூராட்சிச் செயலாளர் துரைசாமி மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார். அவருடன் அமமுக ஒன்றியச் செயலாளர் KC சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

News December 15, 2025

மார்கழி மாதத்தில் செய்யக்கூடாத 3 காரியங்கள்!

image

மார்கழி மாதத்தில் சூரியனின் பலம், ஆற்றல் குறைந்து, குருவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். இதனால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். முக்கியமாக புது வீடு குடிபுகுதல், வீடு கட்டும் பணிகள் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் புதிய தொழில்களும் தொடங்க கூடாதாம். மேலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களையும் நடத்தக்கூடாதாம். Share it

News December 15, 2025

விஜய்யுடன் SK மோதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

image

‘பராசக்தி’ படம் திட்டமிட்டதைவிட முன்னதாக ஜன.9-ம் தேதி வெளியாக உள்ளதாக ஒரு செய்தி பரவியது. அதேநாளில் ‘ஜனநாயகன்’ வெளியாவதால், சிவகார்த்திகேயன், விஜய்யுடன் நேரடியாக மோத நினைக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் படக்குழு நேற்று வெளியிட்டுள்ள போஸ்டர்களில் ஜன.14-ம் தேதியே வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!