News October 20, 2025
பட்டாசு தீக்காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

✦சிறிய அளவிலான தீக்காயத்திற்கு தண்ணீரில் 10- 15 நிமிடங்கள் குளிர வைக்கவும். ஐஸ் வாட்டரை பயன்படுத்த வேண்டாம் ✦தீக்காயம் மீது டூத் பேஸ்ட், எண்ணெய், நெய் வைக்கக் கூடாது ✦சுத்தமான காட்டன் துணியை பாதிக்கப்பட்ட பகுதி மீது கட்டவும் ✦கண்களில் எரிச்சல் & அலர்ஜி ஏற்பட்டால், சுத்தமான நீரில் கண்களை கழுவவும் ✦துணியில் நெருப்பு பிடித்தால், தரையில் படுத்து உருளுவதன் மூலம் நெருப்பு விரைவாக அணையும். SHARE IT.
Similar News
News December 17, 2025
புதுவை: மீனவர்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆலோசனை

மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, இயக்குநர் கிருஷ்ணன் தலைமையிலான வங்காள விரிகுடா நிறுவன நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். காரைக்கால் பொலிவுறு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துதல், புதுச்சேரி மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
News December 17, 2025
ஜெட் வேகத்தில் விலை.. ஒரே நாளில் ₹11,000 உயர்வு

வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹11 உயர்ந்து ₹222-க்கும், கிலோ வெள்ளி ₹11,000 உயர்ந்து ₹2,22,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிச.8-ம் தேதி ₹1,98,000-க்கு விற்பனையான வெள்ளி விலை, 9 நாள்களில் ₹24,000 அதிகரித்துள்ளது.
News December 17, 2025
எந்த சீட்டில் உட்காருவீங்க?

நீங்க விமானத்திலோ, பஸ்சிலோ ஏதோ ஒரு பொது போக்குவரத்தில் டிக்கெட் புக் பண்றீங்க. வண்டியில் ஏறி உள்ளே அமர செல்லும் போது, இவங்கெல்லாம் இதே போல ஆளுக்கு ஒரு சீட்டில் உட்கார்ந்திருக்காங்க. நீங்க எந்த சீட்டில் வேணாலும் உட்காரலாம். ஆனால், ஒரு சீட்டில் மட்டுமே இறங்கும் வரை உட்காரணும். இந்த Situation-ல் எந்த சீட்டில் போய் உட்காருவீங்க? அவங்க கூட என்ன பேசுவீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க?


