News September 4, 2025
சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் வேலை என்ன? சீமான்

TET தேர்வு, கச்சத்தீவு என எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்றால், சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களாட்சி என்பது இங்கு சொல்லாட்சியாக மட்டும்தான் உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மருத்துவம், ஆசிரியர் உட்பட அனைத்துக்கும் தகுதி தேர்வு உள்ள நிலையில் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த தேர்வும் இருப்பது இல்லையே ஏன் எனவும் கேட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
எதெல்லாம் டிரெண்டா மாறுது பாருங்க மக்களே!

நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி SM-ல் பதிவிடுவது தற்போது ட்ரெண்டாக மாறியுள்ளது. காரணமே இல்லாமல் மன்னிப்பு கேட்குறாங்களே என குழம்ப வேண்டாம். எங்கள் நிறுவனம் இவ்வளவு அருமையாக இருக்கிறது, அதனால்தான் உங்களால் தவிர்க்கமுடியவில்லை என்ற டோனில் மன்னிப்பு கடிதங்களை கம்பெனிகள் வெளியிடுகின்றன. கடிதங்களை பார்க்க போட்டோக்களை SWIPE IT. நீங்கள் யாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதுவீங்க?
News November 8, 2025
இந்த தாவரங்களுக்கு விதை தேவையில்லை

சில தாவரங்கள் வளர விதைகள் தேவையில்லை. வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் மூலம் வளர்கின்றன. இதுபோன்று விதைகள் இல்லாமல் வளரும் சில தாவரங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தாவரங்களுக்கு பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 8, 2025
அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்புக்காக கட்சி ஒன்றுபடுவதை ஒருவர் தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.


