News February 23, 2025

பிரதமரின் தமிழ் அக்கறையால் என்ன பலன்? CM ஸ்டாலின்

image

பிரதமரின் தமிழ் அக்கறை தமிழுக்கு என்ன செய்தது என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடி நிதி ஒதுக்கும் மத்திய அரசு, 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடிதான் ஒதுக்கியதாக விமர்சித்துள்ளார். இந்திக்கு எதிரி அல்ல; ஆனால், இந்தியை திணித்தால் தனி குணத்தை தமிழகம் காண்பித்துவிடும் என்றார்.

Similar News

News March 13, 2026

பாகிஸ்தான் அணிக்கு கொலை மிரட்டல்!

image

வங்கதேசத்துடனான முதல் ODI-யில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போட்டியில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் Ex வீரர் பாசித் அலி, வங்கதேசத்துடனான போட்டிக்கு உத்தி வகுத்த நபரை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 13, மாசி 29 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News March 13, 2026

அதிமுகவிடம் 10 இடங்களை கேட்கும் ஜான் பாண்டியன்

image

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்கும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு விஜய் வருவார் என்பது வதந்தி என்றும் அவர் தங்கள் கூட்டணிக்கு உறுதியாக வரமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!