News October 9, 2024
இங்க பிடிச்சது அங்க எதிரொலிக்கும்: வானதி

ஹரியானா, ஜம்மு&காஷ்மீர் தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின் போலி பிம்பங்களை தகர்த்துள்ளதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக BJP வென்றுள்ளது சாதாரண விஷயமல்ல எனக் குறிப்பிட்ட அவர், J&Kவில் 29 தொகுதிகளில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மராட்டியம், ஜார்க்கண்ட் MLA தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும் எனவும் கூறினார்.
Similar News
News November 8, 2025
’24’ சூர்யாவை காப்பியடித்தாரா ராஜமெளலி?

24 படத்தின் சூர்யா (ஆத்ரேயா) கதாபாத்திரத்தை ராஜமெளலி காப்பியடித்துள்ளதாக SM-ல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘Globetrotter’-ல் பிருத்விராஜின் கும்பா என்ற கதாபாத்திர போஸ்டர் வெளியானது. இதை பார்த்ததும் அதே வீல் சேர், முடக்குவாதமான வில்லன் என 24 ஆத்ரேயா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நினைவு வந்தது. ஆனால், அது அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிரதிபலிப்பு என்று டோலிவுட் வட்டாரம் சப்பை கட்டு கட்டுகிறது.
News November 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 513
▶குறள்:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
▶பொருள்: நிர்வாகத்தின் மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
News November 8, 2025
அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்பாக கட்சி ஒன்றுபடுவதை தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.


