News August 6, 2024

சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வாஷிங்டன் சுந்தர்!

image

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு சிறந்த வீரர் விருதினை ICC வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான 3 போட்டியாளர்களை ICC அறிவித்துள்ளது. அதில், அட்கின்சன் (ENG), வாஷிங்டன் சுந்தர் (IND) & கேசல் (SCT) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மூவரில் இந்த விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Similar News

News January 15, 2026

ICC விருதை தட்டித்தூக்கிய வீரர்கள்!

image

டிசம்பர் மாதத்திற்கான ICC-யின் சிறந்த வீரர் விருதை ஆஸி.,யின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் 31 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் லாரா வோல்வார்ட் கைப்பற்றியுள்ளார். கடந்த மாதம் 3 சதங்கள் உட்பட 392 ரன்கள் குவித்து அவர் கவனம் ஈர்த்திருந்தார்.

News January 15, 2026

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு திமுகவினரே காரணம்: TTV

image

TN-ல் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு திமுகவினரின் செயல்பாடுகளே காரணம் என TTV விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கடந்தாண்டு அரக்கோணத்திலும், தற்போது நெல்லையிலும் திமுக நிர்வாகிகள் கைதானதை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் திமுகவினருக்கு தொடர்பிருப்பதாக சாடியுள்ளார். இப்பிரச்னையில் CM ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News January 15, 2026

பெண்ணின் திருமண வாழ்க்கையை முறித்த பொய்

image

பொய்யான தகவல்களை சொல்லி நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும் என்று ஜார்க்கண்ட் HC தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், திருமணத்தில் உண்மைகளை மறைப்பது வாழ்க்கை துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில், உண்மையை மறைத்து பெண் திருமணம் செய்தது உறுதியானதால், கணவர் கோரிய விவாகரத்தை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதுபற்றி உங்க கருத்து?

error: Content is protected !!