News August 20, 2024
இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான பணி இன்று தொடங்குகிறது. 2025 ஜன.1க்குள் 18 வயது நிறைவடைவோரும் இப்போது வாக்காளர்களாக பதிவு செய்யலாம். இன்று முதல் அக்.18 வரை, அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 2025 ஜன.6ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Similar News
News January 21, 2026
தற்கொலைக்கு சமம் என்று சொல்லிவிட்டு கூட்டணியா?

அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக<<18913412>> TTV தினகரன்<<>> அறிவித்துவிட்டார். இந்நிலையில் அதிமுக குறித்த அவரது கடந்த ஒரு மாதகால பேச்சுகள் தற்போது வைரலாகி வருகின்றன. EPS -உடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றும், EPS என்ற தீயசக்தி வரும் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அதே அதிமுகவுடன் TTV கூட்டணி வைத்துள்ளாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
News January 21, 2026
NDA-வில் இணைந்த தினகரனை வரவேற்ற EPS

NDA கூட்டணியில் இணைந்த TTV தினகரனை வரவேற்பதாக EPS தெரிவித்துள்ளார். திமுக கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்த இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கூறிய அவர், நாம் ஒன்றாக இணைந்து திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவோம் என பதிவிட்டுள்ளார். ஆனால் NDA கூட்டணியில் இணையும்போது TTV தினகரன் EPS பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
தேர்தலுக்கு முன்பே காலியான தொகுதிகள்

TN-ல் தற்போது 5 சட்டமன்ற தொகுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலியாகி உள்ளன. கட்சி தாவலால், தஞ்சை ஒரத்தநாடு(வைத்திலிங்கம்), தென்காசியின் ஆலங்குளம்(மனோஜ் பாண்டியன்), ஈரோட்டின் கோபி (KAS) தொகுதிகள் காலியாகி உள்ளன. மேலும், அதிமுக வால்பாறை தொகுதி MLA அமுல் கந்தசாமியும், நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதி திமுக MLA-வாக இருந்த பொன்னுசாமியும் உயிரிழந்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியாகியுள்ளன.


