News June 18, 2024

மீண்டும் உங்களை தேடி ‘மனதின் குரல்’

image

3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, வானொலி மூலம் மக்களுடன் உரையாற்றி வந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கவுள்ளார். அதன்படி, வரும் 30ஆம் தேதி முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகிறது. இந்நிலையில், எந்த தலைப்பில் பேசுவது என்பது குறித்து MyGov Open Forum, NaMo செயலி மற்றும் 1800 11 7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 18, 2026

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

‘Why human connection matters in a digital world’ என்ற தலைப்பில் 9 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை CBSE அறிவித்துள்ளது. இதில் தேசிய அளவில் வெற்றிபெறும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக முறையே ₹50,000, ₹25,000 மற்றும் ₹10,000 வழங்கப்படும். மேலும், பிராந்திய அளவிலும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி அறிய இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News January 18, 2026

இட்லி கல்லு மாறி இருக்கா? அப்போ இப்படி பண்ணுங்க!

image

நாம் விரும்பி உண்ணும் இட்லி, சில சமயங்களில் மண்டையை உடைக்கும் கல்லாக மாறிவிடுவது உண்டு. இந்நிலையில் மல்லிகை பூ போன்ற இட்லியை பெற, நீங்கள் எடுத்து வைத்துள்ள புளித்த இட்லி மாவில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்துவிடவும். அதன்பின் பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மாவை ஊறவிடுங்கள். அதன்பின்னர் மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுங்கள். மல்லிகைப் பூ போன்ற இட்லி ரெடி!

News January 18, 2026

திமுகவை பின்பற்றும் EPS? மனோ தங்கராஜ்

image

மகளிர் உரிமைத் தொகையை ஏமாற்று வித்தை எனக் கூறிய EPS, தற்போது ₹2,000 தருவதாக பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். இதன் மூலம் மாநில நிதி நிலைமை சரியான நிலையில் இருப்பதை EPS உணர்ந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2021 தேர்தலில் அத்திட்டத்தை அரசியலுக்கான அறிவிப்பு என விமர்சித்த EPS, தற்போது திமுகவை பின்பற்றி ₹2,000 தரப்படும் என்று அறிவித்தாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!