News November 14, 2025
VIRAL: ராகுல் காந்தியின் ‘95 தேர்தல் தோல்விகள்’

காங்கிரஸின் தோல்வியை கலாய்த்து பாஜக ஐடி விங் வெளியிட்ட X பதிவு வைரலாகி வருகிறது. காங்கிரஸில் முக்கிய தலைவராக ராகுல் உருவெடுத்த 2005 முதல் 2025 வரையான 20 ஆண்டுகளில், அக்கட்சியின் அனைத்து தேர்தல் தோல்விகள் & பின்னடைவுகளை குறிப்பிட்டு, ‘ராகுல் காந்தி! இன்னொரு தேர்தல், இன்னொரு தோல்வி!’ எனக் குறிப்பிட்டு, தேர்தலில் தோற்பதில் இவரது consistency-ஐ யாருமே மிஞ்ச முடியாது என்று கிண்டல் செய்துள்ளது.
Similar News
News December 12, 2025
Zoho-க்கு மாறிய மத்திய அரசின் இமெயில்கள்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த 12.68 லட்சம் இமெயில்கள், Zoho நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதில் 7.57 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சொந்தமானவை. இந்த முக்கிய மின்னஞ்சல் மாற்றம், தேசிய தகவல் மையத்தின் (NIC) வழியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றங்களின் தரவுகள், அறிவுசார் சொத்துரிமையின் உரிமை அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
₹50 லட்சம்.. 20 நாள்களில் கிடைத்த அதிர்ஷ்டம்

ம.பி.,யின் பன்னா மாவட்டம் கனிம வளங்கள் நிறைந்தது. அங்கு கூலி வேலை செய்யும் சதிஷ், சஜித் என்ற நண்பர்கள், கஷ்டப்பட்டு பணத்தை தயார் செய்து, சுரங்கம் ஒன்றை 20 நாள்களுக்கு முன்னர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அதில் தோண்டியதில் ₹50 லட்சம் மதிப்பு மிக்க வைரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. சஜித்தின் தாத்தாவும், தந்தையும் பல ஆண்டுகளாக தோண்டியும் கிடைக்காத அதிர்ஷ்டம், இவர்களுக்கு 20 நாள்களில் கிடைத்துள்ளது.
News December 12, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்

*நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். *இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும். *யாரையும் குறை கூறாதீர்கள், அறிவற்றவர்கள் செய்யும் தவறைச் செய்யாதீர்கள். *உண்மையான முன்னேற்றம் என்பது மெதுவானது ஆனால் நிச்சயமானது. *நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.


