News July 10, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

image

காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நிறைவடைந்தது. காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். தற்போது, வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 11, 2025

சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலை 25-ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044-24641919 (அ) 24957414 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News July 11, 2025

‘நிபா’ வைரஸ் பரவல்.. பழங்களை கழுவி சாப்பிடுங்க

image

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோயாகும். குறிப்பாக பழ வகை வெளவால்கள், பன்றி போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT.

News July 11, 2025

கடன் வாங்காமல் சமாளிக்க… சிம்பிள் டிப்ஸ்!

image

அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என்ற காலம் மாறி, ஆடம்பரத்துக்காக தற்போது கடன் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால், இது பெரும் சிக்கல்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடன் வாங்காமல் இருக்க, இந்த சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க
✦ஒரு குறிப்பிட்ட தொகை கையிருப்பு வெச்சிக்கோங்க
✦திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு சின்ன சேமிப்பு வேண்டும்
✦பங்குச் சந்தை, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

error: Content is protected !!