News April 5, 2025
CSKவை மீட்டெடுக்கும் விஜய் ஷங்கர்

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த CSK அணியை, விஜய் ஷங்கர் தனது அரை சதத்தால் காப்பாற்றியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 184 என்ற இமாலய இலக்கை துரத்தும் CSK அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, CSK 16.4 ஓவர்களில் 116 எடுத்து விளையாடி வருகிறது. வெற்றி பெற 19 பந்துகளில் 68 ரன்கள் தேவை.
Similar News
News September 18, 2025
ரணகளமாகும் களம்: சூப்பர் 4 சுற்றில் மீண்டும் IND vs PAK !

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய UAE உடனான போட்டியில் வென்றதன் மூலம், பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
News September 18, 2025
19 பேர் பலி: கேரளாவில் அமீபா அரசியல்

கேரளாவில் <<17718285>>மூளையை உண்ணும் அமீபாவால்<<>> பலியானவர்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளும் அரசு புள்ளிவிவரங்களை மறைப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கடந்த 2016-ல் முதல் பாதிப்பு ஏற்பட்டபோது முதல் ஆட்சியில் இருக்கும் இந்த CPM அரசு, இது தொடர்பான முறையான நடவடிக்கை எடுக்காததால், கடந்த 15 நாள்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சாடியுள்ளன.
News September 18, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். *ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். *ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும். *பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும். *லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.