News August 23, 2025
தலைவராக விஜய் உயரவில்லை: பெ.சண்முகம்

தவெக மாநாட்டில் CM ஸ்டாலினை ‘அங்கிள்’ என விஜய் அழைத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு பதிலாக தரம் தாழ்ந்த வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார். நடிகர் என்ற நிலையில் இருந்து, தலைவர் என்ற நிலைக்கு அவர் இன்னும் உயரவில்லை என்றும் விமர்சித்தார். விஜய் பேசியது சரியா?
Similar News
News January 25, 2026
தவெகவுக்கு 40% ஓட்டு: CTR நிர்மல்குமார்

ஆளுங்கட்சியின் குற்றங்களை தேர்தல் அன்று விசில் ஊதி மக்கள் வெளிப்படுத்த தயாராகி வருவதாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், TN-ல் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தவெகவுக்கு ஒரு வாக்கு இருப்பதாகவும், அண்மையில் திமுகவுக்கு தேர்தல் வேலை செய்யும் நபர் ஒருவர், தவெகவுக்கு 40% வாக்குகள் கிடைக்கும் என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
News January 25, 2026
நாளை வங்கிக் கணக்கில் ₹2,000.. SCAM ALERT

குடியரசு தினத்தையொட்டி, நாளை ஏழை மக்களுக்கு PM மோடி ₹2,000 வழங்கவிருப்பதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம், இந்த தகவல் முற்றிலும் தவறானது எனவும், இதுபோன்ற அறிவிப்பை மோடி வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அரசின் திட்டங்களை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 25, 2026
ICC-யை எதிர்க்க போவதில்லை: வங்கதேசம்!

T20I WC-ல் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து, ICC-ன் முடிவை மதிப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற, முடிந்தவரை முயற்சி செய்தோம் என கூறியுள்ளது. மேலும், தங்களது முடிவை ICC விரும்பவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? என குறிப்பிட்டு, ICC-ன் முடிவை எதிர்த்து நிற்க போவதில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரிய ஊடகக் குழு தலைவர் அம்ஜத் ஹுசைன் விளக்கமளித்துள்ளார்.


