News July 13, 2024

திருமண புகைப்படங்களை பகிர்ந்த வரலட்சுமி

image

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் சச்தேவுக்கும் கடந்த 10ஆம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடந்தது. சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது இளவரசன் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும், அதை தான் செய்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News July 8, 2025

IND விளையாடிய மைதானத்தை கலாய்த்த கம்மின்ஸ்

image

IND VS ENG 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஸ்பால் என சொல்லி ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கி., கிரிக்கெட் போர்டை பலர் விமர்சித்து வருகின்றனர். தற்போது இப்போட்டியை பற்றி பேசிய கம்மின்ஸ், இதுபோன்ற மைதானத்தில் யார் பந்துவீச்சாளராக விரும்புவார்கள்? என நக்கலடித்துள்ளார். இங்கி., உள்ள மிக மோசமான 3-வது பிளாட் பிட்ச் என எட்ஜ்பேஸ்டன் மைதானத்தை விமர்சித்துள்ளார்.

News July 8, 2025

மழையால் சின்னாபின்னமான கூட்டுறவு வங்கி

image

இமாச்சலில் உள்ள துனாங் நகரில் சுமார் 8,000 வாடிக்கையாளர்கள் கொண்ட மாநில கூட்டுறவு வங்கி உள்ளது. மழை வெள்ளத்தால் இந்த வங்கியின் ஒரு கதவு அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்தது. குப்பைகள், கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம், அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News July 8, 2025

ரஜினி பட வசனத்தை பச்சை குத்திய NZ கிரிக்கெட் வீரர்

image

NZ கிரிக்கெட் வீரரான ஆதித்யா அசோக் ’படையப்பா’-ல் வரும் ‘என் வழி தனி வழி’ என்ற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார். வேலூர் மாவடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 4 வயது முதல் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். தனது தாத்தா உயிரிழப்பதற்கு முன்பு அவருடன் ’படையப்பா’ படம் பார்த்ததாகவும், அவர் இறப்புக்கு பின்பு அவருக்கும் தனக்குமான நெருக்கமான உரையாடலை நினைவூட்ட பச்சை குத்தியதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!