News August 22, 2024
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள். *என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், எனவே என்னை நானே ஒருபோதும் சந்தேகித்ததில்லை. *இங்கே என்னை விட சிறந்த தொடக்க வீரர்கள் உள்ளனர், ஆனால் நான் ஒரு வலுவான முடிக்கும் வீரன்.
Similar News
News November 12, 2025
RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.
News November 12, 2025
சத்தீஸ்கரில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் தேசிய பூங்கா பகுதியில், இன்று காலையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 303 ரைபிள்ஸ், INSAS ரைபிள்ஸ், stenguns, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News November 12, 2025
பிஹார் தேர்தல்: வாக்குப்பதிவில் புதிய சாதனை

பிஹார் தேர்தல் வரலாற்றில், வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக EC ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். 1951-ல் அதிகபட்சமாக 66.9% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 71% வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன், அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தாய்மார்கள் தங்கள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.


