News August 5, 2024

அமெரிக்க பங்குச்சந்தைகள் தொடர் சரிவு

image

அமெரிக்க பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளன. அந்நாட்டு மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைக்காததன் காரணமாக வெள்ளிக்கிழமை முன்னணி நிறுவனங்களின் மதிப்பு கடுமையாக சரிந்தது. அதே நிலைமை இன்றும் தொடர்வதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதன் தாக்கம் இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக பங்குச்சந்தைகளிலும் காணப்பட்டது. இந்தியாவின் நிஃப்டி இன்று சுமார் 662 புள்ளிகளை இழந்தது.

Similar News

News January 19, 2026

தமிழகத்திற்கு Goodbye சொன்ன வடகிழக்கு பருவமழை

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக IMD அறிவித்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அதேசமயம் வரும் 23-ல் இருந்து 25-ம் தேதி வரை TN மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது. மேலும் 20-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் IMD கூறியுள்ளது.

News January 19, 2026

மாமல்லன் நீர்த்தேக்கத்தால் 170 மில்லியன் லிட்டர் நீர்: CM

image

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த உண்மை தெரிந்தும் திமுக குறித்து பலர் பொய் சொல்வதாக CM ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்போரூரில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது என்றும், இதனால் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் நீரை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

ரோஹித்தை மீண்டும் கேப்டனாக்குங்க..

image

NZ-க்கு எதிரான ODI தொடர் தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் கம்பீர் & கேப்டன் கில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், 2027 ODI WC-க்கு முன் ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என Ex வீரர் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ODI அணியில் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் BCCI பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!