News April 4, 2025

அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

image

உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. Dow nosedives 1,679 புள்ளிகளும், Nasdaq 500 புள்ளிகளும் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அமெரிக்க பொருளாதாரமும், மக்களும் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Similar News

News January 13, 2026

தருமபுரி: இட்டு வைப்பு பத்திரம் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இட்டு வைப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 13, 2026

வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட்

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

News January 13, 2026

பொங்கல்: மல்லிகைப்பூ விலை ₹6,000 குறைந்தது

image

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1 கிலோ ₹12,000 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று மதுரை, தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ₹4,000-₹6,000 வரை விற்பனையாகிறது. ஆனால், இதுவும் பெரிய விலை என மக்கள் புலம்புகின்றனர். 1 கிலோ முல்லை ₹2,500, பிச்சிப்பூ ₹2,000, கனகாம்பரம் ₹2,000, சம்பங்கி ₹150-க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!