News November 19, 2025
UPI-ல் கடன் வழங்க தயாராகும் தனியார் வங்கிகள்

தற்போது UPI வாயிலாக மூன்றாம் தரப்பு செயலிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வட்டிவிகிதம், வங்கிகளை விட அதிகமாகும். இந்நிலையில், தனியார் வங்கிகள் UPI மூலம் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா, HDFC உள்ளிட்ட வங்கிகள் நவி, சூப்பர்மனி போன்ற நிதி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, கடன் திட்டங்களை வழங்க ஆயத்தமாகி வருகின்றன.
Similar News
News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.
News January 15, 2026
ராஜ மாதா காலமானார்

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
News January 15, 2026
திரை நட்சத்திரங்களின் பொங்கல் க்ளிக்ஸ்! (PHOTOS)

கரும்பு, இனிப்பு பொங்கல் என தமிழகமே பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்தவேளையில், நமது திரை நட்சத்திரங்களும் தங்களது வீடுகளில் பாரம்பரிய உடையில் பொங்கலை சிறப்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், கார்த்தி, மாரி செல்வராஜ், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில், அவர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை மேலே SWIPE பண்ணி பாருங்க!


