News November 19, 2025
UPI-ல் கடன் வழங்க தயாராகும் தனியார் வங்கிகள்

தற்போது UPI வாயிலாக மூன்றாம் தரப்பு செயலிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வட்டிவிகிதம், வங்கிகளை விட அதிகமாகும். இந்நிலையில், தனியார் வங்கிகள் UPI மூலம் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா, HDFC உள்ளிட்ட வங்கிகள் நவி, சூப்பர்மனி போன்ற நிதி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, கடன் திட்டங்களை வழங்க ஆயத்தமாகி வருகின்றன.
Similar News
News January 23, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT.
News January 23, 2026
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்.. டிடிவி தினகரன் சூசகம்

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக, அதிமுக கூட்டணிகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டன. OPS, ராமதாஸ், பிரேமலதா மட்டுமே தங்களது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், OPS உடன் நட்புறவில் இருக்கும் TTV தினகரன், தங்களது (NDA) கூட்டணிக்கு அவர் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்பினால், OPS தங்களுடன் வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
News January 23, 2026
BREAKING: இந்தியாவுக்கு 209 ரன்கள் டார்கெட்

2-வது டி20 ஆட்டத்தில் நியூசி., அணி இந்தியாவுக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. ரச்சின் ரவீந்திரா(44) மட்டும் சற்று நிலைத்து நின்று ஆடினார். இறுதியில் கேப்டன் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க 20 ஓவர் முடிவில் 208/6 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 wkts வீழ்த்தினார்.


