News August 5, 2024

‘STR 48’ படத்தின் அப்டேட்

image

சிம்பு – தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள ‘STR 48’ படம் குறித்து கலை இயக்குநரான மூர்த்தி அப்டேட் கொடுத்துள்ளார். ஃபேண்டஸி டிராமாவாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் செட் மினியேச்சர் வடிவமைப்புப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளதாகக் கூறிய அவர், இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறியுள்ளார். அத்துடன், படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

விஜய்யை மறைமுக அட்டாக் செய்த KP முனுசாமி

image

எம்ஜிஆர் படத்திலும், பொதுவாழ்விலும் நேர்மையானவர். ஆனால் இப்போ அரசியல் வரும் நடிகர்கள் அப்படி இருக்கிறார்களா என அதிமுகவின் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்ஜிஆர் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறும் கேரக்டரில் நடித்தவர் என்றும், ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் மது குடித்து, 4 பெண்களுடன் நடனம் ஆடுவதுபோல் நடிக்கின்றனர். அவர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

News January 19, 2026

3 மாடி வீடு, கார், 3 ஆட்டோ.. பிச்சைக்காரரின் சொத்து!

image

Beggar free இந்தூரை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் அதிகாரிகளை மங்கிலால் என்ற பிச்சைக்காரர் அதிர வைத்துள்ளார். அவருக்கு சொந்தமாக 3 மாடி வீடு & PMAY திட்டத்தின் கீழ் ஒரு 1 BHK ஃபிளாட், 3 ஆட்டோக்கள், டிரைவருடன் ஒரு Swift காரும் உள்ளதாம். ஆட்டோக்களை வாடகைக்கு விடுவதுடன், பணத்தை வட்டிக்கு கொடுத்தும் அவர் சம்பாதிக்கிறாராம். அதிகாரிகள் அவரின் முழு சொத்து விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

தனுஷ்-மிருணாள் திருமணமா? நண்பர் சொன்ன தகவல்

image

தனுஷ் – மிருணாள் திருமணம் பற்றிய தகவல் உண்மை இல்லை என தனுஷின் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பரும், இயக்குநருமான ஒருவர் தெரிவித்துள்ளார். தினமும் தன்னுடன் பேசும் தனுஷ் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை என்ற அவர், எப்படி யாரிடமும் சொல்லாமல் திருமணம் செய்வார் எனவும் கேட்டுள்ளார். அத்துடன், தனுஷுக்கு 2-வது திருமணத்தில் விருப்பமில்லை எனவும், மகன்களை வளர்ப்பதில் அவர் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!